பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட குழந்தைகள் விடுதி  கையளிக்கப்பட்டது

Casinos to Visit Near Orlando, Florida

பருத்தித்துறை தள வைத்தியசாலையில் புனரமைப்பு செய்யப்பட்  குழந்தைகள் விடுதி  திறப்பு விழா செப்டம்பர் 07, 2020 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ. திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு விடுதியை திறந்தவைத்தார்.

மறைந்த விஜயரத்னா குருக்கள் மற்றும் மறைந்த சந்திரகுமாரி அம்மா ஆகியோரின் நினைவாக  திரு , திருமதி கீதா மாதவன் ஐயரின் நிதி உதவியுடன் விரைவான புதுப்பித்தல் திட்டம் 2020 இன் கீழ் இந்த குழந்தைகள் விடுதி  3.0 மில்லியன் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்  திரு பி.செந்தில்நந்தன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர். திரு அ.கேதீஸ்வரன் மற்றும் வடமராட்சி வடக்கு உதவி பிரதேச செயலாளர் திரு இ. சிவாகரன், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

 

facebook Share on Facebook