பயிர்ச்சிகிச்சை முகாம்

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு விசேட பயிர்ச்சிகிச்சை முகாமொன்று வவுனியா சந்தை வட்டாரத்தில் கடந்த 11.10.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. இச் சந்தை வட்டார பயிர்ச் சிகிச்சை நிகழ்ச்சித் திட்டமானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 4.30 மணி முதல் காலை 7.30 மணி வரை குறித்த இடத்தில் நடாத்தப்பட்டுவருகிறது. இதன்போது பயிர்ச்செய்கையாளர்கள் தாவர வைத்தியர்களுடன் தாம் பயிர்ச்செய்கையில் எதிர்கொள்ளும் நோய், பீடைத் தாக்கங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய தீர்வுகளைப் பெற்றுச் செல்கின்றனர்.