பதில் செயலாளர் நியமனம்

வடக்கு மாகாண சபையின் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக திரு.கே.தெய்வேந்திரம் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு கே.தெய்வேந்திரம் அவர்கள் வடக்கு மாகாண சபையின், விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர்விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக தற்போது பணியாற்றிக் கொண்டிருப்பதுடன் அதற்கு மேலதிகமாக இந்த நியமனம் கௌரவ ஆளுநர் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று (06) முற்பகல் இடம்பெற்றது.
-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

Please follow and like us:
0