நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பு

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு ஓமந்தை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதியன்று நெல் நாற்று நடுகைத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்பொன்று நடாத்தப்பட்டது. வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விவசாயிகள் சேற்று விதைப்பையே அதிகம் மேற்கொண்டு வருவதுடன் நாற்று நடுகை முறையை மிக அரிதாகவே பின்பற்றுகின்றனர. ஆனால் ஏனைய விதைப்பு முறைகளிலும் நாற்று நடுகைத் தொழில்நுட்பமானது அதிக விளைச்சலைத் தருவதுடன், ஏக்கருக்குத் தேவையான விதை நெல்லின் அளவும் குறைவு. மேலும் இது நோய்த் தாக்கங்கள் பரவுவதை குறைப்பதுடன் களைகளின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது. மேலும் களை பிடுங்குதல் போன்ற விவசாய செயன்முறைகளையும் இது இலகுவாக்குகின்றது. இப் பயிற்சி நெறியில் நாற்றுமேடை தயாரித்தல், நாற்று நடுகைமுறைகள் தொடர்பான விளக்கங்கள் பங்குபற்றுநர்களிற்கு வழங்கப்பட்டது. இப் பயிற்சிநெறியில் கிட்டத்தட்ட 50 விவசாயிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.