நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? – கௌரவ ஆளுநர்

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? இதுவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனித சமுதாயமும் தனியாகவும் குழுவாகவும் கேட்கவேண்டிய ஒரே ஒரு கேள்வி என்று நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

இதழியல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் 05 ஏப்பிரல் 2019 அன்று முற்பகல் கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு