இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தினம் கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் 04 பெப்ரவரி 2021 அன்று கொண்டாடப்பட்டது.
தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் சுற்றுநிருபம் 24/2020 இல் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிநிரலின்படி, பிரதி பிரதம செயலாளர் திரு.ஆர்.பத்மநாதன் அவர்கள் தேசியக் கொடியை மு.ப. 8:00 மணிக்கு ஏற்றிவைத்தார். பின்னர் ”நாட்டிற்கு சுதந்திரத்தின் முக்கியத்துவம்” எனும் தொனிப் பொருளில் உரையாற்றினார்.
நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், சம்பிரதாயபூர்வமான மரம் நடுகை நிகழ்வை பிரதி பிரதம செயலாளர்களான திரு.ஆர்.உமகாந்தன், திரு.ஆர்.பத்மநாதன் மற்றும் எந்திரி.எஸ்.சன்முகநாதன் ஆகியோர் இணைந்து மு.ப 8.30 மணிக்கு நடாத்தினர். பிரதம செயலாளர் செயலக கொத்தணியிக் கீழ் உள்ள திணைக்கள தலைவர்கள், உதவி. செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர் செயலக கொத்தணியில் பணியாற்றும் ஏனைய அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.