தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் வர்த்தகச் சந்தை – 2022

தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் அனுசரணையுடன் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2022 நிகழ்வானது யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ம் திகதிகளில்  நடைபெற்றது.

இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை உற்பத்தியாளர்கள் மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 45 விற்பனை கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இதில் 15 கைத்தறி நெசவு உற்பத்திகள் காட்சி மற்றும் விற்பனை கூடங்களும், 15 பற்றிக் காட்சி மற்றும் விற்பனை கூடங்களும் ஏனைய உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் விற்பனை கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் மற்றும் செயலாளர, பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சு அவர்களும் கலந்து கொன்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண அமைச்சினுடைய செயலாளர்கள், மேலதிக செயலாளர், அபிவிருத்தி, பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சு மற்றும் பணிப்பாளர், புடைவை கைத்தொழில் திணைக்களம், கொழும்பு ஆகியோர் கலந்து கொன்டு சிறப்பித்ததுடன் கைத்தறி நெசவுப் போட்டி 2020 மற்றும் 2021 இல் வெற்றி பெற்ற 64 நெசவாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.