தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு உளுக்குளம் விவசாயபோதனாசிரியர் பிரிவில் கடந்த 08.10.2019 ஆம் திகதி அன்று தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. இதன் போது தேனீ குடித்தொகையை பேணுதல், பிரித்தல், பீடைத் தகக்கங்களிலிருந்து பாதுகாத்தல் போன்றன தொடர்பான செயன்முறை விளக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தேனீ வளர்பானது வவுனியா மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனினும் மிகக் குறைந்தளவிலான முயற்சியாளர்களே மேற்படி தேனீவளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் மேலும் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் முகமாக இப்பயிற்சிநெறி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. மேற்படி பயிற்சிநெறியில் ஏறத்தாழ 30 பயனாளிகள் பங்குபற்றி பயனடைந்துள்ளனர்.