தேன் உற்பத்திக்காகதேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் எனும் பயிற்சி நெறியானது வட்டக்கச்சியிலுள்ள மாவட்டவிவசாயப் பயிற்சிநிலையத்தில் 26.02.2020 ஆம் திகதி நடைபெற்றது. இப் பயிற்சிநெறியின் வளவாளர்களாக சுவீடன் விவசாய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் தகை நிலைப் பேராசிரியர் திரு.ந.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் திருமதி.லோட்டாகிறிஸ்ரியன்சன் அவர்களும் கலந்துகொண்டனர். மாகாண விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் இப் பயிற்சிநெறியில் பங்குபற்றிப் பயனடைந்தனர்
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்கள் இப் பயிற்சிநெறியினை ஆரம்பித்து வைத்தார். இப் பயிற்சிநெறியில் வளவாளராகக்
கலந்துகொண்ட சுவீடன் பல்கலைக்கழக விரிவாக்க அலுவலராகக் கடமையாற்றும் திருமதி.லோட்டா அவர்கள் தேனீவளர்ப்புத் தொடர்பான வல்லுநராக விளங்குவதுடன் தேன் உற்பத்தி கம்பனி ஒன்றினையும் தனது நாட்டில் நடாத்திவருகிறார்.
இப் பயிற்சியின் போது கிருணபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு விஜயம் மேற்கொள்ளப்பட்டு பெட்டிகளில் காணப்படும் தேனீக் குடித்தொகைகள் பார்வையிடப்பட்டது.
தகைநிலைப் பேராசிரியர் திரு.ந.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் கலந்துரையாடலினை மேற்கொண்டு அத்துடன் பயிற்சிநெறியினை நிறைவுசெய்தார்.