தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்திலிருந்து இம்முறை தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ரூபா ஒரு மில்லியன் (ரூபா. 1,000,000) நிதியினை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளேன் என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 08 யூலை 2019 அன்று இடம்பெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விழுந்துபோகாமல் வாழ்வது மட்டுமல்ல விளையாட்டில் எப்போதெல்லாம் நாம் வீழ்கின்றோமோ அப்போதெல்லாம் மீண்டும் எழக்கூடிய மனவலுவும் உடல்பலமும் இருக்க கூடியதுதான் விளையாட்டு. இன்று தேசிய மட்டத்தில் 6ஆவது இடத்தினை தக்கவைத்துக்கொண்டிருக்கும் நாம் முதலாம் இடத்திற்கு வருவதற்கான தடைகள் , சவால்கள் என்ன என்று ஆராய்ந்து மேலும், என்னென்ன முயற்சிகளை செய்யவேண்டும் என்று சிந்தித்து அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்ட ஆளுநர் அவர்கள் , கஷ்டத்தின் மத்தியில் இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ள மாணவர்களுக்கான சலுகைகளை உத்தியோகத்தர்கள் செய்துகொடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

 

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

Please follow and like us:
0