தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பலூன் பறக்கவிடும் நிகழ்வு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சில் 26.06.2019 அன்று பலூன் பறக்கவிடும் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொனிப்பொருள் அடங்கிய பதாதைகள் காற்று நிரப்பப்பட்ட பலூனில் இணைத்து வானில் பறக்கவிடப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு.சி.திருவாகரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும்  அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.