ஜேர்மன் நாட்டின் தூதுவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோன் ரொட் அவர்கள் வடமாகாண  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (04) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

29 வருடங்களுக்கு பின்னர் தமது இடத்தினை பார்வையிட காங்கேசன்துறை ,கீரிமலை மக்கள் இன்று விஜயம் செய்ததனை நினைவுகூர்ந்த ஆளுநர் அவர்கள், ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பொதுமக்களுடைய காணிகளை அவர்களிடமே விடுவிக்கும் செயற்பாடுகளை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Top Slot Sites to Play Online Slot Machines in the UK

வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் அதற்காக ஆளுநர் என்ற வகையில் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் தொடர்பில் தெரிவித்த ஆளுநர் அவர்கள் ஜேர்மன் அரசாங்கத்தினால் வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவமுடியுமான வழிகளில் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

அதேவேளை வடமாகாணம் எதிர்காலத்தில் முகம்கொடுக்கவுள்ள நீர்ப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐந்து திட்டங்கள் குறித்து விளக்கமளித்த ஆளுநர் அவர்கள் அதன் முதற்திட்டமான வடமராட்சி களப்பு திட்டம் குறித்தும் தெளிவுபடுத்தினார். மேலும் வடமாகாணத்தின் பாதுகாப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு