ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண ஆளுநர் அவர்களின் வாழ்த்துக்கள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண மக்களுடன் இணைந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தனக்கான ஒரு இடத்தினை மீள்நிலைநாட்டிக் கொள்வதற்கு புதியதொரு வழிகாட்டலும் தூர நோக்கும் அர்பணிப்பு நிறைந்த கடின உழைப்பும் நமது தாய்நாட்டிற்கு  தற்போது தேவையாகவுள்ளது.

இன மத அரசியல் பேதமின்றி இலங்கையின் அனைத்து மக்களையும் தனது வெற்றிப் பயணத்தில் இணைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு புதிய ஜனாதிபதிக்கு தைரியமும் நம்பிக்கையும் கிடைப்பதற்கு வடமாகாண மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றேன்

ஜனநாயகம், சமத்துவம் நிறைந்த வளமான ஒன்றுபட்ட இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு வடமாகாண மக்கள் தம்மை அர்ப்பணித்துள்ளார்கள்

நமது தாய்நாடு எப்பொழுதுமே ஆசீர்வதிக்கப்படட்டும்!

கலாநிதி சுரேன் ராகவன்
ஆளுநர்
வடமாகாணம்