சுதேச மருந்துகளின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை நிலையம் – நல்லூர் உற்சவம் – 2022

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலிற்கமைய 2022 ம் ஆண்டின் நல்லூர் உற்சவத்தில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மருந்து உற்பத்தி பிரிவால் தயாரிக்கப்பட்ட சுதேச மருந்துகளை காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை நிலையமானது 17/08/2022 புதன்கிழமை அன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு திருவிழா முடியும் காலப்பகுதி வரை விற்பனை நடைபெற்றது.

இவ் விற்பனை நிலையத்தில் சுதேச மருந்துகள், ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மருத்துவ ஆலோசனைகளும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மருந்து உற்பத்தி பிரிவால் தயாரிக்கப்பட்ட 30 வகையான மருந்துகள் இவ் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டன.