சுதேச மருத்துவ சேவை – வயோதிபர் இல்லம் – கைதடி

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களமானது சேவையினை விஸ்தரிக்கும் முகமாக கைதடி வயோதிபர் இல்லத்தில் கடந்த 22.05.2023 அன்று சுதேச மருத்துவ சேவையை ஆரம்பித்துள்ளது.

கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையானது இச் சேவையை கைதடி வயோதிபர் இல்லத்தில் தங்கியிருக்கும் வயோதிபர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளது. இவ் வைத்தியசாலையில் கடமை புரியும் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குரிய சமூக மருத்துவ உத்தியோகத்தர்களினால் இவ் வயோதிபர்களுக்குரிய மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது.

இவ் ஆரம்ப நிகழ்வில் கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரி, வயோதிபர் இல்லத்தின் அத்தியட்சகர், தென்மராட்சி சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண ஆயுர்வேத ஒருங்கிணைப்பு மருத்துவ உத்தியோகத்தர், வயோதிப இல்ல உத்தியோகத்தர்கள்,மற்றும் வயோதிபர்கள் பங்கு பற்றினார்கள்.