சிற்றூர்தி உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் உள்ள சிற்றூர்திகளின் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் முகம்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் ஆலோசனைக்கமைய ஆளுநரின் செயலாளர் , வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் வடமாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 19 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது யாழ் மாவட்டத்தில் சிற்றூர்தியின் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பயணிகள் முகம்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது சிற்றூர்தி பயணத்தின்போது பற்றுச்சீட்டு மற்றும் மிகுதிப்பணம் வழங்கப்படாமை. சிறுவர்கள் மற்றும் முதியோர்களை ஏற்றுவதில் சிற்றூர்தி நடத்துனர்களின் அசமந்தபோக்கு , போட்டித்தன்மையுடன் வாகனங்களை முந்திச்செல்லல் , வீதி சமிக்ஞைகள் மற்றும் வேகக்கட்டுப்பாட்டினை பின்பற்றாது செயற்படுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சிற்றூர்தி உரிமையாளர்கள் சட்டத்திலே இருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட சிற்றூர்தி சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.