மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது, திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்கள் தலைமையில் LEADS நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் வடமாகாண பேரவை செயலக கேட்போர் கூடத்தில் 2024 டிசெம்பர் 18ம் திகதி நடைபெற்றது.
இக் கருத்தரங்கின் வளவாளராக திரு. J. தற்பரன் (Attorney-at-Law, சிரேஷ்ட உதவிச் செயலாளர், நீதி அமைச்சு) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துரைகளை வழங்கியதுடன், தற்போது நடைமுறையிலுள்ள சிறுவர் தொடர்பான சட்டங்களை செயற்படுத்துவதிலுள்ள நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றைக் கையாளுதல் தொடர்பாக தனது கருத்துரைகளை வழங்கினார்
இக் கருத்தரங்கில் LEADS நிறுவனத்தின் பிரதிநிதிகள், சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், மற்றும் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.