சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவதற்கு ஏதுவாக விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை நிலையம், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையுடன் இணைந்து சிறந்த விவசாய நடைமுறைகளை பின்பற்றும் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 04.03.2021 ஆம் திகதி உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.க.மு.அ.சுகூர் தலைமையில் நடைபெற்றது

இந் நிகழ்வில் வட மாகான விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனார். இந் நிகழ்வில் 15 விவசாயிகளுக்கு A தர சான்றிதழ்களும் 10 விவசாயிகளுக்கு உட்பிரவேச சான்றிதழ்களும் (Entry Certificate) வழங்கப்பட்டன.