சிறந்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வு – 2018

வடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்து கௌரவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிறந்த விவசாயிகள் கௌரவிப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. அஞ்சனாதேவி சிறிரங்கன் அவர்களின் தலைமையில் 14.05.2019 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு. சி.சிவகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செல்வராணி நிக்கலஸ்பிள்ளை, திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி திரு. தி. கருணைநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். விதைகள் அத்தாட்சிப்படுத்தல் சேவை நிலைய பொறுப்பதிகாரி
திரு.அ.ரமணீதரன், கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி.கோபிநாத் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் வெற்றி பெற்ற விவசாயிகள் முதலானோர் கலந்து கொண்டார்கள்.

இக் கௌரவிப்பு நிகழ்வில் மத்திய விவசாய அமைச்சினால் ‘நாம் வளர்த்து நாம் உண்போம்” எனும் விரைவுபடுத்தும் விவசாய அபிவிருத்தித் திட்டம் – 2018 இன் கீழ் நடாத்தப்பட்ட சிறந்த விவசாயிகள் தெரிவிற்கான மாகாண மட்டப் போட்டியில் யாழ் மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்ற இரு வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இப் போட்டியில் சிறந்த வர்த்தக ரீதியிலான பயிர்;செய்கையாளர் வகுதியின் கீழ் அளவெட்டி வடக்கைச் சேர்ந்த மனோகரன் கோகிலன் என்பவர் வட மாகாணத்தில் முதலாமிடத்தினையும், தேசிய மட்டத்தில் ஏழாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார். இவருக்கு சான்றிதழும் பணப்பரிசாக ரூபா ரூபா 10,000.00  பெறுமதி கொண்ட காசோலையம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அடுத்து சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றி பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர் வகுதியின் கீழ் கோப்பாய் தெற்கைச் சேர்ந்த சண்முகநாதன் ரஞ்சித்குமார் என்பவர் வட மாகாணத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். இவருக்கு சான்றிதழும் பணப்பரிசாக ரூபா ரூபா 7,500.00 பெறுமதி கொண்ட காசோலையம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்; சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள் மற்றும் சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்களும் மாகாண விவசாயத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காலநிலை மாற்றத்திற்கேற்ப சிறந்த முறையில் பயிர்ச்செய்கையை மேற்கொள்பவர்கள் மற்றும் பழப்பயிர்ச் செய்கையில் சிறந்த விவசாயச் செயன்முறைகளைப் பின்பற்றுபவர்கள்; என 04 தலைப்புக்களின் கீழ் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட 12 வெற்றியாளர்களிற்கும் வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசு என்பன வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். பணப்பரிசாக முதல் மூன்று வெற்றியாளர்களிற்கும் முறையே ரூபா 15,000.00 , ரூபா 12,500.00, ரூபா 10,000.00 எனும் அடிப்படையில் காசோலைகள் வழங்கப்பட்டன. விவசாயப் போதனாசிரியர் பிரிவு மட்டத்தில் வெற்றி பெற்ற 136 வெற்றியாளர்கள் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

ஒவ்வோர் தலைப்புக்களின் கீழும் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ் வருமாறு

  1. சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் திருமதி.ஜெகதீஸ்வரன் சர்மிளா படித்த மகளிர் திட்டம், மிருசுவில்
02 2ம் இடம் திருமதி.கோணேஸ்வரன் சுகந்தினி அந்திரானை, பன்னாலை
03 3ம் இடம் திருமதி. நடேசன் லோகேஸ்வரி வாரிவளவு, காரைநகர்
  1. சிறந்த சேதனச் செய்கையாளர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் நடராஜா சனேந்திரா புளியங்கூடல் தெற்கு, ஊர்காவற்றுறை
02 2ம் இடம் அம்பலவாணர் கணேஸ்வரன் சசிக்குமார் இல 19, கடவைப்புலம், சுன்னாகம்
03 3ம் இடம் தம்பிராசா ஸ்ரீகாந்தன் அன்னங்கை, உரும்பிராய் மேற்கு
  1. பழப்பயிர்ச் செய்கையில் சிறந்த விவசாயச் செயன்முறைகளைப் பின்பற்றுபவர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம்  சின்னத்துரை அமிர்தலிங்கம் உரும்பிராய் வடக்கு
02 2ம் இடம் சின்னத்தம்பி குலசேகரம் கரணவாய் வடக்கு
03 3ம் இடம் கணபதிப்பிள்ளை தர்மகுலசிங்கம் எழுதுமட்டுவாள் வடக்கு
  1. காலநிலை மாற்றத்திற்கேற்ப சிறந்த முறையில் பயிர்ச்செய்கையை மேற்கொள்பவர்
தொ.இல மாவட்ட நிலை வெற்றியாளரின் ழுழுப் பெயர் முகவரி
01 1ம் இடம் கிட்இனர் குணசேகரம் கோப்பாய் தெற்கு
02 2ம் இடம் பொன்னம்பலம் இராசலிங்கம் தொட்டிலடி
03 3ம் இடம் குலசிங்கம் றஜந்தன் உடுவில்