க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் முதலாம் இடம் பெற்ற மாணவன் தனராஜ் சுந்தர்பவனை கௌரவிக்கும் நிகழ்வு

கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்ற சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவனை கௌரவிக்கும் நிகழ்வு 23 யூன் 2021 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வன்னி கோப் (Australia)அனுசரனையுடன் வட மாகாண கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட மடிக்கணனியை அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலாம் இடம் பெற்ற மாணவன் தனராஜ் சுந்தர்பவனுக்கு வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
குறித்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் , உதவிச்செயலாளர், கல்வி அமைச்சின் வடமாகாண இணைப்பாளர் , தென்மராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் , உதவி கல்விப்பணிப்பாளர் மற்றும் சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

of the Best Land-Based Casinos in Pennsylvania