கௌரவ வட மாகாண ஆளுநரின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிறக்கவிருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாட்டின் அனைத்து மக்களுக்கும் வளமான சுபிட்சத்தையும், ஆரோக்கியமான வாழ்வினையும், மகிழ்ச்சியான சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துவதோடு அனைவரதும் புத்தாண்டுப் பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்.

இப் புத்தாண்டினை ஒன்றுபட்டு கொண்டாடும் இலங்கை மக்கள் அனைவரும் கோவிட்-19 மட்டுமின்றி அனைத்துவித அசௌகரியங்களையும், அநீதிகளையும் களைவதற்கு ஒன்றுபட்டு நின்று, இலங்கை தீவினை ஒரு சிறந்த நாடாக மாற்றும் திடசங்கற்பத்தினை இந்த பெருநாளில் மேற்கொள்வோம் என்று வேண்டி, எனது இனிய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

கௌரவ ஆளுநர்
வட மாகாணம்