கௌரவ ஆளுநர் – லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சந்திப்பு

லண்டனுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ ஆளுநர்  கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த ஞாயிறு (ஒக்.20) முற்பகல் லண்டனில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின்  கல்வி ,சுகாதாரம் ,விவசாயம் ,இளைஞர் விவகாரம் மற்றும் மீன்பிடித்துறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்துறைகளின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறு உதவமுடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறான முதலீட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம் அவற்றிற்கு புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு எவ்வகையில் அமையவேண்டும் என்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டது. மேலும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி தொடர்பில் இதன்போது விளக்கமளித்த கௌரவ ஆளுநர் அவர்கள் , இந்த கூட்டுறவு வங்கியின் ஊடாக வடமாகாண பாமர மக்களின் அபிவிருத்திக்கு எவ்வாறு புலம்பெயர் மக்கள் உதவ முடியும் என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு