கௌரவ ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2020 (2021 மார்ச்) மாணவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் தனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

கொவிட் – 19 தாக்கம் காரணமாக சுமார் ஒரு வருட காலமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் தமது பரீட்சைக்கான தயார்ப்படுத்தலை பாடசாலைகளிலும், சூம் செயலி (Zoom) ஊடாக நிகழ்நிலையிலும் தயார்ப்படுத்தியது மட்டுமல்லாது வீடுகளில் இருந்த காலத்தில் சுயகற்றலை மேற்கொண்டு தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள். அவர்களது கடின முயற்சிக்கான பலனை அடைவதற்கான ஓர் தேர்வாக இப் பரீட்சையினை எதிர்வரும் மார்ச் மாதம் 01 ஆம் திகதி எமது மாணவச் செல்வங்கள் எதிர்கொள்ளவுள்ளார்கள்.

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் இப் பரீட்சைக்கு தோற்றுகின்ற பரீட்சார்த்திகள் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றார்.

அத்துடன் இப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளும், பரீட்சைக் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மேலும் பேரிடர் நீங்காத இச் சூழ்நிலையிலும் கல்விச் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக உதவிகளை மேற்கொண்டுவரும் சுகாதாரத்துறை, உள்ளுராட்சித்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் எதிர்காலத்திலும் சீரான ஒத்துழைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.