“கோவிட் தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி” என்னும் செயற்றிட்டத்தின் கள விஜயம்

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் “கோவிட் தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி” என்னும் கருப்பொருளுக்கு அமைய கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு 30 மே 2021 அன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் அரியாலை,கைதடி தெற்கு,கோப்பாய், கரவெட்டி மற்றும் பருத்தித்துறை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மையங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டு நேரடியாக பார்வையிட்டார். குறித்த கள விஜயத்தில் வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், நீரியல் வள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், கொவிட் -19 தடுப்பு செயலணியின் இணைத்தலைவரும் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியுமான மேஜர்.ஜெனரல் பிரியந்த பெரேரா,வட மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதமரின் வடக்கு கிழக்கு இணைப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி), குறித்த பகுதிகளின் பிரதேச செயலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், குறித்த செயற்திட்டம் தொடர்பாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களிடம் கருத்துக்களை பெற்று ஏனையோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.