மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சியில்; கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையமானது கொவிட் 19 கடந்த 29.12.2021ம் திகதி அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இந் நிலையமானது கொவிட் 19 ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில், உதவிப் பிரதம செயலாளர், வடக்கு மாகாணம், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயவாளர், கிளிநொச்சி மாவட்ட செயலர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர்இ சித்த வைத்திய பிரதி மாகாண ஆணையாளர்இ கிளிநொச்சி பிராந்திய சேவைகள் பணிப்பாளர், சித்த வைத்தியத் துறை அதிகாரிகள் மற்றும் சித்த வைத்திய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் முதலாவது சஞ்சிகையான ‘பரிகாரி’ ஆனது வெளியிட்டு வைக்கப்பட்டது.