கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான சிற்றூழியர்கள் கௌரவ ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர்

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான பத்து சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2019/03/27 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அ.பத்திநாதன், பிரதம செயலாளர் வடக்கு மாகாணம், எல்.இளங்கோவன், செயளாலர், ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம், திருமதி.ரூபினி வரதலிங்கம், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், திருமதி.வனஜா செல்வரட்ணம், மாகாணப் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களம், வடக்கு மாகாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த அரச முதியோர் இல்லத்தில் உள்ள சிற்றூழியர்களின் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 10 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதில் 7 ஆண்களும் 3 பெண்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.