குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு அல்லது இழப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நலிவுற்ற, தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கல் கருத்திட்டமானது கௌரவ ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் அவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக முதற்கட்டமாக மன்னார் – 20, யாழ்ப்பாணம் – 26, கிளிநொச்சி – 22, வவுனியா -14, முல்லைத்தீவு – 17 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் இரண்டாம் கட்டமாக மன்னார் – 04, யாழ்ப்பாணம் – 07, கிளிநொச்சி – 02, வவுனியா -05, முல்லைத்தீவு – 06 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் இதுவரை உலர்உணவுப் பொதிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

Casinos Within Driving Distance of Connecticut - Caxambas