‘வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு லட்சம் வேலை’ எனும் திட்டத்தின், கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாகக் கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை வளாகத்தில் சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் கடந்த 03.02.2022 சுப நேரத்தில் நடைபெற்றது.
ரூபா 0.25 மில்லியன் ஆரம்ப நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மாதாந்தம் 1000 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில், சுதேச மருத்தவத் திணைக்களத்தின் ஆணையாளர், மருத்துவமனையின் மருத்துவப் பொறுப்பதிகாரி, வைத்தியர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.