கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களிற்கான களச்சற்றுலா

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ்; நிலக்கடலை விதை உற்பத்தியினை ஊக்குவிப்பதுடன்; விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் 30 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளீடுகளாக ½ ஏக்கர் விஸ்தீரணத்துக்கான 20Kg ஜம்போ நிலக்கடலை விதை, 25Kg ஜிப்ஸம் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் என்பன விநியோகிக்கப்பட்டு பயிர் தற்போது அறுவடை நிலையில் காணப்படுகின்றது.

மேற்படி நிலக்கடலைப் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு பயனுடையதாக அமைவதனால் இதனை வட மாகாண விவசாயிகளிடையே பிரபல்யப்படுத்திப் பயிர்ச் செய்கையினை விஸ்தரிக்கும் நோக்கில்; மாவட்ட ரீதியாக வர்த்தக நோக்கில் நிலக்கடலைச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் 20 விவசாயிகள் மற்றும் 2 விவசாயப் போதனாசிரியர்கள் வீதம் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்;து முறையே 17.07.2020, 18.07.2020, 21.072020 மற்றும் 22.07.2020 ஆம் திகதிகளில் களச்சுற்றுலாவானது வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மேற்படி களச்சுற்றுலாவின் போது திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளைச் சேர்ந்த ஜம்போ நிலக்கடலைச் செய்கையில் ஈடுபட்டிருந்த சில விவசாயிகளின் தோட்டங்களைப் பார்வையிட்டதுடன் சிறு அளவிவலான விவசாய பங்குடமை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வர்த்தக ரீதியிலான கௌபி பயிர்ச்செய்கை, இஞ்சி செய்கை மற்றும் A.K.M சர்வதேச இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம் ஆகியவற்றினையும் பார்வையிட்டனர். களச் சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகள் விதை உள்ளீடுகளினைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகளினை மேற்கொள்ளும் பட்சத்தில் ஜம்போ நிலக்கடலைச் செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்ததுடன் இஞசி செய்கையில் ஈடுபடும் பொருட்டு இஞ்சி கன்றுகளையும் கொள்வனவு செய்தனர்.