விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு கோவிற்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் காளானிலிருந்து உணவு தயாரிப்பு முறைகள் தொடர்பான செயன்முறை விளக்க பயிற்சிநெறி 12.10.2019 அன்று நடாத்தப்பட்டது. இதன்போது 5 வகையான சமையல் குறிப்புக்கள் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. காளான் உணவுகள் அதிகளவு புரதத்தைக் கொண்டிருப்பதுடன் புற்றுநோய் மற்றும் கொலஸ்திரோல் போன்ற நோய்களுக்கெதிராக மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இவை விட்டமின் – E இனை அதிகளவில் கொண்டுள்ளது. கலமுதிர்ச்சியைத் தடுத்து இளமையானதோற்றத்தை வழங்குகின்றது. கலமீளுருவாக்கத்தை தூண்டுகிறது. இப் பயிற்சிநெறியில் அப் பகுதியைச் சேர்ந்தசுமார் 20 பெண்கள் பங்குபற்றியி பயனடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.