கனடா உயர்ஸ்தானிகருக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் 26 ஆகஸ்ட் 2019 அன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, போருக்குபின்னரான தற்போதைய வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடமாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகருடன் Canadian ஒருங்கிணைந்த மோதல் பகுப்பாய்வு செயல்முறை ஐ சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட அலுவலர்களான சர்மளா நைடூ மற்றும் விக்ரம்வீர் சுகத் ஆகியோர் கலந்துகொண்டனர்.


– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு