ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கோப் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் ரிம் சட்ரன் ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 31 மே 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.