ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும்,வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (01.03.2024) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய புதிய முதலீடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ ஆளுநரிடம் உறுதியளித்தார்.