உலக ஓட்டிசம் தினத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது

உலக ஓட்டிசம் தினத்தை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வானது 02 ஏப்ரல் 2019 ஆம் திகதி அன்று கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாதவம் ஓட்டிஸம் நிலையத்திலிருந்து தங்கள் பெற்றோருடன் வருகைதந்த சிறுவர் குழாமினர் இந் நிகழ்வில் பங்கேற்றனர். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அலுவலர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர் கொத்தணியின்கீழ் வரும் திணைக்களங்களின் அலுவலர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உலக ஓட்டிசம் தினத்தை நினைவுகூரும் வகையில் நீல பலூன்கள் சிறார்களினாலும் வருமை தந்த அலுவலர்களினாலும் பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் பறக்கவிடப்பட்டன. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் உளவியல் நிபுணர் வைத்திய கலாநிதி.சிவதாசன் அவர்களினால் ஓட்டிசம் குழந்தைகளிற்கான அறிகுறிகள், இனம்காணல் மற்றும் ஆரம்ப சிகிச்சைமுறை போன்றவற்றினை உள்ளடக்கிய வகையில் ஒரு சுருக்கமான உரையினை நிகழ்த்தினார். தொடர்ந்து பங்குபற்றிய குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.