உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய செத்தல் மிளகாய் உற்பத்தி திட்டம்

கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்களின் தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயப்பணிப்பாளர், வடமாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கும் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக.

விவசாயத் திணைக்களத்துடன் Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனம் இணைந்து உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மிளகாய் செய்கையின் மூலம் செத்தல் மிளகாய் உற்பத்தியினை அதிகரிக்கும் செயல் திட்டத்தினை வட மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக வட மாகணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் தலா பத்து விவசாயிகள் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு கடந்த 23.01.2021 ஆம் திகதி அன்று வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு. சி.சிவகுமார், Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் திரு.புத்திக ஜெயவர்த்தன, தினே ரணசிங்கே மற்றும் மாகாண விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் ஐந்து மாவட்டங்களுக்கு விஜயம் செய்து தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

கிளிநொச்சியில் முழங்காவில் பகுதியிலும், மன்னாரில் கூராயிலும், வவுனியாவில் கனகராயன் குளத்திலும், முல்லைத்தீவில் உடையார்கட்டுப்பகுதியிலும் குறித்த கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.

கலந்துரையாடலின் போது Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவன உத்தியோகத்தர்கள் திட்டம் தொடர்பாக விளக்கமளித்து திட்டத்தில் தமது வகிபாகம் தொடர்பாக தெளிவுபடுத்தினர்கள.; விவசாயப்பணிப்பபாளர் திட்டம்தொடர்பிலான விவசாயிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை அவர்களிடையே கேட்டறிந்து Ceylon Vege Tech (Pvt) Ltd நிறுவனத்தினருக்கு விளக்கியதுடன் தொழிலுட்ப ரீதியான விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார் கலந்துரையாடிய விவசாயிகள் செத்தல் மிளகாய் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.