இலங்கை விமானப்படையின் கண்காட்சிக்கூடம்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைப்பு

Casino Bonus Review - Promotions, Signup Offer & More

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு  யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (06.03.2024) திறந்துவைத்தார். இலங்கை விமானப்படையின், படைத் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன, வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன்பந்துலசேன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையின் ஆற்றிய கௌரவ ஆளுநர்,  இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை வடக்கில் கொண்டாட தீர்மானித்தமை தொடர்பில் நன்றியை தெரிவித்ததோடு, வடக்கு மாகாண மக்கள்,  இளைஞர்கள் மற்றும் பாடசாலை  மாணவர்களின் நலனுக்காக கல்வி, விமான போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை நடாத்தி, விலைமதிப்பற்ற அனுபவத்தை பெற்றுக்கொடுக்க விமானப் படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை விமானப்படையினரால் வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டட புனர்நிர்மான பணிகள், மரக்கன்றுகளை நடும் செயற்பாடு மற்றும் 73 ஆயிரம் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆகியவற்றுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தனது நன்றியை தெரிவித்தார். வடக்கு மாகாண மக்களின் வாழ்வியலை மேம்படுத்த தேவையான ஏனைய வசதிகளையும் இலங்கை விமானப்படையினால் மேற்கொள்ள வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.