வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் 21.11.2023 அன்று தனது 93வது வயதில் கொழும்பில் இயற்கை எய்தினார்.
அன்னாரது மறைவையொற்றி வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறைவேற்று அதிகாரிகள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இதயபூர்வமான அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.
மேலும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பிரதம செயலாளரும் அனைத்து உத்தியோகத்தர்களும்
வடக்கு மாகாண சபை