இந்தியாவின் 70வது குடியரசு நாள் நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

இந்தியாவின் குடியரசு நாளின் 70வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கலைஞர்களை கௌரவித்து பாராட்டினார்.
26 ஜனவரி 2020 அன்று யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ். பாலச்சந்திரன் தலைமையிலான இவ் விழாவில் சர்வமத தலைவர்கள், யாழ் மாநகர முதல்வர், அரசியல்வாதிகள் வடக்கின் நிர்வாக உயரதிகாரிகள், கல்விமான்கள் என பலரும் கலந்துகொண்டனர் .
இந்திய மற்றும் உள்ளூர் கலைஞர்கள் தமது கலை ஆற்றுகையை சிறப்பாகச் வெளிப்படுத்தி அனைவரதும் பாராட்டுகளைப் பெற்றனர்.