ஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 22 ஜனவரி 2019  அன்று முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Casino Franchise Review - Be Your Own Boss with Ease!

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் காணிகள் மற்றும் நீர்வளங்கள் தொடர்பாகவும் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆரயப்பட்டதுடன் இம்மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டுமுதல் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் முழுமையான விபரங்கள், அவற்றில் மீள்குடியேறிய மக்களின் முழுமையான விபரங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்கள், ஏனைய உதவித்திட்டங்கள் என்பன தொடர்பிலான முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவன் , யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களும்  கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளரும் இம்மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலாளர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.