சென்னைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் உலகளாவிய ரீதியில் ஹோட்டல்களை நடத்திவரும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவரும் நிறைவேற்று பணிப்பாளருமான எம்.ஜி.எம்.ஆனந்த் அவர்களை 11 நவம்பர் 2019 அன்று பிற்பகல் சென்னையில் சந்தித்தார்.
சுற்றுலாத்துறையில் வெற்றிகரமான ஒரு நிறுவனமாக உலகளாவிய ரீதியில் திகழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தினை வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு மேற்கொள்வதற்கு கௌரவ ஆளுநர் இதன்போது அழைப்பு விடுத்தார்.