ஆளுநரின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

2019 ஆம் ஆண்டிலே மலரும் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

போருக்கு பின் பத்தாண்டுகள் கடந்து செல்கின்ற இந்த நிலையில் சமுதாய, கலாசார, அரசியல் ரீதியாக ஒவ்வொருவருடைய உரிமைகளும், பொறுப்புக்களும் கிடைக்கப்பெற வேண்டிய ஒரு வருடமாக அமைய வேண்டுமென்று நான் பிரார்த்திக்கின்றேன்.

எமது மக்கள் எல்லோரும் ஒன்றாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையும், இலங்கை ஒரு சுபீட்சமடைந்த தேசமாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்களுக்கான அடித்தளம் எடுக்கக்கூடிய ஒரு வருடமாகவும் இபபுத்தாண்டு மலரட்டும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதிக்கும் ஏனைய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் மலரும் புத்தாண்டு சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமைய பிரார்த்திக்கிறேன்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கலாநிதி சுரேன் ராகவன்
2019 ஏப்ரல் 14ஆம் திகதி