ஆசிய நாடுகளின் தூதுவர்களின் யாழ் விஜயம்

தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து ஆசிய குரூப் என்ற பெயரில் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்திற்கு விஜயம் செய்தனர்.

அங்கு நெசவுத்தொழிற்பயிற்சி நடாத்தும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன் பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பாகவும் கலந்துரையாடினர். மேலும் மனிதவலுவினை பயன்படுத்தி பெண்களால் செய்யப்படுகின்ற ஆடைகள் புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடுப்புக்கள் என்பனவற்றை பார்வையிட்டு தமது பாராட்டுகளையும் தெரிவித்ததுடன் உற்பத்திப் பொருட்களை அவர்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்திருந்தனர்.