அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வடமாகாண மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் வழங்க தீர்மானம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்தொற்று நிலமையை கருத்தில் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வடமாகாண மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இத் தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் குறிப்பிடுகையில் , ஆய்வின் அடிப்படையில் அபாய நிலையில் உள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.