அகிலத் திருநாயகியை, அதிமேதகு ஜனாதிபதி நேரில் சந்தித்துப் பாராட்டினார்

பிலிப்பைன்சில் நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த அகிலத் திருநாயகி அவர்கள், அதிமேதகு ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (06/01/2024) இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.