இவ்விழாவானது மாகாணப் பணிப்பாளர் சமூகசேவைகள் திணைக்களம் செல்வி.செ.அகல்யா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நாளில் முதன்மை அதிதியாக மகளிர் விவகாரம் மற்றும் சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதியாக வேலணை பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களும், கௌரவ அதிதியாக அரச முதியோர் இல்ல ஓய்வு அத்தியட்சகர் திரு.க.கனகராஜா அவர்களும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
‘மாறும் உலகில் முதியவர்களின் மீள் உருவாக்கம்’ என்ற கருப்பொருளுக்கமைய இவ்வாரம் கொண்டாடப்படுகின்றது. இவ் சர்வதேச முதியோர் வாரமானது கைதடி அரச முதியோர் இல்லத்தில் ஒரு வார நிகழ்வாக கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த மங்களகரமான நிகழ்வில் முதியவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை கௌரவிப்பதும் கொண்டாடப்படுவதுமே எமது நோக்கமாகும். தம் வாழ்நாள் முழுவதும் அவர்கள் எமக்கு வழங்கிய ஞானம், வழிகாட்டுதல் மற்றும் அன்புக்கு எமது நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்கின்ற ஒரு வாரமாக அதாவது சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதற்கு உழவர்களுக்கு பொங்கல் திருநாள் போல, முதியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இவ்வாரம் எமக்கு கிடைத்திருக்கின்றது.
எந்த ஒரு சமுதாயத்திலும் பெரியவர்களின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில், அவர்கள் கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு கடத்துபவர்களாகவும், பாரம்பரியத்தின் பாதுகாவலராகவும் விளங்குகின்றார்கள். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும், அறிவும் எமக்கு பொக்கிஷங்களாகும். இத்தினம் எமக்கு பெரியவர்களை பாராட்ட ஒரு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறது. மட்டுமன்றி, அவர்களை நாம் அணுகவும், அவர்களுடன் நேரத்தை செலவிடவும், அவர்களின் இருப்புக்கு நன்றி தெரிவிக்கவும் இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.
மாறி வரும் உலகில் தொழில்நுட்பம் அதீத வேகம் பெற்று வருவதால் வயதுக்கு ஏற்ப வரும் ஞானத்தை கவனிக்காமல் விடுவதும் கருத்தில் கொள்ளத்தக்கது. நம் வாழ்வின் சமநிலை, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு வரக்கூடிய தனித்துவமாக கண்ணோட்டத்தை பெரியவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது ஊன்றிக் கருத்தில் கொள்ளத்தக்கது. பொறுமை, விடாமுயற்சி மற்றும் மனித உறவுகளின் மதிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்களின் அனுபவச் செயல்கள் நினைவூட்டுகின்றன. அதுமட்டுமன்றி முதியவர்களின் கதைகள் எமக்கு பின்னடைவு, தகவலமைப்பு மற்றும் பச்சாதாபத்தின் முக்கியத்துவத்தை காண்பிக்கின்றன.
இவ்வாறான அனுபவச் சொத்துக்களான முதியவர்களுக்கு எமது சார்பில் ஒரு கருணை செயலோ, இதயéர்வமான உரையாடலோ, சிறிய பாராட்டுதலோ அவர்களுக்கு எம்மால் வழங்கப்படுகின்ற போது அவர்கள் தமது ஞானம் இருப்பு மதிக்கப்பட்டு போற்றப்படுவதை உணர்வார்கள். எப்போதும் நமது சமுதாயம் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்கும் அவர்களின் அறிவு, கருத்துக்கள், அனுபவங்களின் பரிமாற்றம் அவசியம். பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை வளர்ப்பதன் மூலம் சூழலில் நம் பெரியவர்களின் ஞானம் மதிக்கப்படும் என்பதுடன் அவர்களின் குரல்களை கேட்கும் உலகத்தையும் உருவாக்க முடியும். முதியவர்களின் அனுபவங்களிலிருந்து தொடர்ச்சியாக பாடத்தை கற்றுக்கொண்டும், நன்றியுணர்வுடன் வழிகாட்டுதல்களை பெற்றும் பெரியவர்களை மதிக்கும் செயல்திறன் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் என இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோம்.
முதலாம் நாள் நிகழ்வுகள்
இரண்டாம் நாள் நிகழ்வுகள்
மூன்றாம் நாள் நிகழ்வுகள்
நான்காம் நாள் நிகழ்வுகள்
ஐந்தாம் நாள் நிகழ்வுகள்
ஆறாம் நாள் நிகழ்வுகள்
ஏழாம் நாள் நிகழ்வுகள்