மாகாணமட்டத்தில் கொரொனா விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண சுகாதார அமைச்சினால் மாகாண மட்டத்தில் கொரொனா தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் மாகாண சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் 17.03.2020 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.பா.செந்தில்நந்தனன் தலைமையில் நடைபெற்றது வடமாகாணத்தில் கொரொனா தொற்று பற்றிய தற்போதைய நிலை பற்றியும் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோருக்கான மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் தொடர்பாகவும் தற்சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், யாழ்மாநகரசபையின் கௌரவ மேயர் இ.ஆனோல்ட், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, மாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள அனைத்து சுகாதார நிறுவன பணிப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், பிரதேச செயலர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.