முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் அவர்களும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம் பௌவுசி அவர்களும் சுவிஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்களும் பங்களாதேஸின் உயர்ஸ்தானிகரும் 09 ஏப்பிரல் 2019 அன்று பிற்பகல் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்த்திற்குமான அலுவலகம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இதுவரையிலும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திராத றுகுணு பல்கலைக்ககழத்தின் 50 மாணவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தது யாழ் பல்கலைக்கழகத்தின் 50 மாணவர்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியிருந்ததுடன் அம்மாணவர்களை ஆளுநருடைய வாசஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினையும் வழங்கியிருந்தது.

றுகுணு மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆளுநர் அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு நேற்று பிற்பகல் வருகைந்தந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்,சுவிஸ்லாந்து, நெதர்லாந்து தூதுவர்கள் மற்றும் பங்களாதேஸ் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோருடன் தமது அனுவங்களை பகிர்ந்து கொண்டனர்.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

Please follow and like us:
0