cm header3

Hon. Chief Minister

Hon. Canagasabapathy Viswalingam Wigneswaran

Chief Minister of Northern Provincial Council

Chief Minister's Office,
Kandy Road,
Kaithady,
Sri Lanka

 
Tel: +94-21-2217311 
Fax: +94-21-2217227
Email:
cv.wigneswaran@gmail.com

 

New Year Message of Chief Minister

புத்தாண்டை வரவேற்போம்!


வட மாகாண சபை நடைமுறைக்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தி அடைந்துவிட்டன. வடகிழக்கு மாகாண சபை வலுவற்றதாக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்தின் நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடம் இருக்கவில்லை. மத்திய அரசாங்கத்தின் நெறிப்படுத்தலின் கீழ்த்தான் இயங்கி வந்தது. அத்துடன் போர் நடந்து கொண்டும் இருந்தது.

2013ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் பதவி ஏற்ற பின்னரும் எமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, மட்டுப்படுத்தி, செயலற்றதாக்கப் பல நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தாலும் அதன் முகவர்களாலும் மேற்கொள்ளப்பட்டன.

கடந்து செல்லும் 2015ம் ஆண்டின் ஜனவரி மாதம் 8ந் திகதி, மத்தியில் ஒரு வித நெகிழ்வும் மலர்வும் ஏற்பட்டது.

டிசெம்பர் மாதம் 30ம் திகதி எமது அமைச்சர்களும், அலுவலர்களும் சேர்ந்திருந்து உணவருந்தியதைப் புதுவருடத்திற்கான கட்டியமாகக் காண்கின்றேன். எமது வடமாகாண சபை வரும் புது வருடத்தில் கூடிய வலுவுடன், திறனுடன், புரிந்துணர்வுடன் மக்கள் நலம் கருதி கடமையாற்ற வேண்டும் என்பதே எமது புத்தாண்டு எதிர்பார்ப்பு.

யாவரும் இவ்வருடம் சுகத்துடனும், சுபீட்சத்துடனும், மனத்திருப்தியுடனும் வாழ வேண்டும் என்று வாழ்த்தும் அதே நேரம் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலனுக்காக, நன்மைக்காக, நல்வாழ்விற்காக மனமுவந்து நாங்கள் யாவரும் உழைக்க முன் வருவோமாக என்று யாவரையுந் தயை கூர்ந்து கேட்டுக் கொள்கின்றேன்.


அன்புடன்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தி

Swearing In

thecm swearing thumb

Budget Speeches